காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் குளித்த மூன்று சிறுமியர், நேற்று மாயமாகினர்.
காஞ்சிபுரம் அடுத்த, தும்பவனம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் பூரணி, 15; சம்பத் மகள்கள் ஜெயஸ்ரீ, 15; லட்சுமி, 14.இவர்கள் மூவரும், அதே பகுதியைச் சேர்ந்த, கட்டட வேலை செய்து வரும், பூரணியின் தாய் மாமன் தாமோதரன், 35, என்பவருடன், நேற்று மாலை, ஓரிக்கை பாலாற்றில் குளிக்கச் சென்றனர்.அப்போது, இடுப்பளவு தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுமியரும், திடீரென மாயமாகினர்.
சிறுமியர் மாயமானது குறித்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஆற்றின் பல இடங்களில் நீண்ட நேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், மாலையில் திரும்பிச் சென்றனர். ஆற்றின் சில இடங்களில், 7 அடிக்கும் மேல் பள்ளங்கள் உள்ளன. அவற்றில் தேங்கிய நீரில் மூழ்கியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE