ராமநாதபுரம் : புரெவி புயல் காரணமாக ராமநாதபுரத்தில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்தது. போதிய வடிகால் வசதியின்றி நகர், புறநகர் வீதிகளில் நீர் தேங்கி நின்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி, சக்கரக்கோட்டை, பட்டிணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால் பராமரிப்படாமல் உள்ளது. புரெவி புயல் காரணமாக நேற்றுமுன்தினம் மதியம் முதல் மழை தொடர்ந்து பெய்தது. நீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி ராமநாதபுரம்- மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி, ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் தேங்கியது. காட்டுபிள்ளையார் கோயில் தெருவில் ஐயப்பன்கோயில் செல்லும் வழியில் மழைநீர் தேங்கியதால் இப்பகுதியில் நடந்து செல்பவர்களும், இருசக்கரவாகனத்தில் செல்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE