திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் புரெவி புயலால் பலத்த மழை பெய்தது. தீர்த்தாண்டதானம், நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புல்லுார் உள்ளிட்ட கடற்கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்கள் அங்குள்ள அரசு பள்ளிகட்டடத்தில் தங்க வைக்கபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.இது குறித்து மகாசக்திபுரம் மீனவர்கள் கூறியதாவது:நேற்று மாலை வரை புரெவி புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கமான காற்றை விட சற்று அதிகமாக வீசியது. தொண்டி பகுதியில் கரையை கடக்கும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கையாக படகுகளைகடற்கரையில் நிறுத்தினோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE