பரமக்குடி : பரமக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட நவீன மீன் அங்காடிதிறக்கப்படாமல் உள்ளதால், ரூ. 1 கோடி மதிப்பிலான கட்டடம் வீணாகிவருகிறது.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட மீன் விற்பனை வளாகம் மீன்கடைத்தெருவான வைகை ஆற்றின் கரையோரம் செயல்பட்டது. இங்கிருந்தகட்டடங்கள்சேதமடைந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்குமுன் இடிக்கப்பட்டு, மீன் வளத்துறை மூலம் ரூ. 1 கோடி மதிப்பில்கட்டடங்கள் கட்டும் பணி நிறைவடைந்தது.28 கடைகள், மீன் அலுவலகம், மீன்கள் சுத்தம் செய்யும்இடம், குளிர் பதன சேமிப்பு அறைக்கு இடம் ஒதுக்கப்பட்டது.திறப்பு விழாவில்அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால் நகர் முழுவதும் தெருவோரமீன் கடைகள் அதிகரித்து வருகிறது. சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை நடப்பதுடன், ஆங்காங்கே கழிவுகளைகொட்டி செல்வதால் தொற்று ஏற்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE