பொது செய்தி

தமிழ்நாடு

புயலால் பாதிக்காத மன்னார் வளைகுடா தீவு

Added : டிச 03, 2020
Share
Advertisement
சாயல்குடி : மண்டபம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகளில் 21 தீவுகள் உள்ளன. பேரிடர் காலங்களான சுனாமி, புயல், இயற்கை சீற்றம், கனமழை நேரங்களில் தீவுகளில் பாதிப்பை சந்திக்காததற்கு பவளப்பாறைகள் இயற்கை அரணாக விளங்குகிறது.ஒவ்வொரு தீவுகளும் 0.25 எக்டேர் முதல் 125 எக்டேர் வரை பரப்பளவை கொண்டுள்ளது. இந்த தீவுகளை சுற்றிலும்மீன்களின் இருப்பிடமாகத் திகழும்
 புயலால் பாதிக்காத மன்னார் வளைகுடா தீவு

சாயல்குடி : மண்டபம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகளில் 21 தீவுகள் உள்ளன. பேரிடர் காலங்களான சுனாமி, புயல், இயற்கை சீற்றம், கனமழை நேரங்களில் தீவுகளில் பாதிப்பை சந்திக்காததற்கு பவளப்பாறைகள் இயற்கை அரணாக விளங்குகிறது.

ஒவ்வொரு தீவுகளும் 0.25 எக்டேர் முதல் 125 எக்டேர் வரை பரப்பளவை கொண்டுள்ளது. இந்த தீவுகளை சுற்றிலும்மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப்பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடாப்பகுதிகளில் உள்ளது.

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின வனகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:பொதுவாக தீவுகளில் இடப்பரப்பளவிற்கு ஏற்றவகையில் பல்வேறு வகையானமரங்கள் வளர்ந்துள்ளது. தீவுகளை சுற்றிலும் இயற்கை அரணாக பவளப்பாறைகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கடல்சீற்றம், புயல் காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறது.

பேரலைகளின் தாக்கம் தீவுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமலும், கடல்நீர் உட்புகாமலும் இருப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.மீனினங்களுக்கும், அரியவகை உயிரினங்களுக்கும் பக்கபலமாக உள்ளது.ஆட்கள் நடமாட்டமில்லாத தீவுகளில் உள்ள மரங்களும் காற்றுத்தடுப்பானாக உள்ளது.

இதனால் பேரிடர் காலங்களில் கூட தீவுகள் பாதிக்கப்படுவதில்லை. பவளப்பாறைகளின் பயன்கள் குறித்தும், எதிர்பாராமல் வலைகளில் சிக்கும் பவளப்பாறைகளை மீண்டும் கடலிலேயேவிட்டு விடுவது குறித்தும் மன்னார் வளைகுடா உயிரினச்சரகம் சார்பில், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X