பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் காப்பகத்தில் மீனவருக்கு நிவாரணம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மழையால் பாதித்து புயல் காப்பகத்தில் தஞ்சமடைந்த 515 மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.புரெவி புயலால் ராமேஸ்வரம் பகுதியில்கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் தனுஷ்கோடி, தங்கச்சிமடம் அந்தோணியார்புரம், பாம்பன் சின்னபாலம், தரவைதோப்பு பகுதியில் மழைநீர் தேங்கியும், கடல் அரிப்பால் மீனவர்கள் குடிசை வீடுக்கு சேதமடையும் அபாயம் இருந்ததால்,

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மழையால் பாதித்து புயல் காப்பகத்தில் தஞ்சமடைந்த 515 மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

புரெவி புயலால் ராமேஸ்வரம் பகுதியில்கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் தனுஷ்கோடி, தங்கச்சிமடம் அந்தோணியார்புரம், பாம்பன் சின்னபாலம், தரவைதோப்பு பகுதியில் மழைநீர் தேங்கியும், கடல் அரிப்பால் மீனவர்கள் குடிசை வீடுக்கு சேதமடையும் அபாயம் இருந்ததால், இப்பகுதியில் உள்ள 515 மீனவர்களை ராமேஸ்வரம் தெற்கு கரையூர், தங்கச்சிமடம் பேக்கரும்பு புயல்காப்பகத்திலும், பாம்பனில் தனியார் திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு சேலை, போர்வை, பிஸ்கட் மற்றும்அத்தியாவசிய உணவு பொருட்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, அ.தி.மு.க., மாவட்ட செயலர் முனியசாமி, ராமேஸ்வரம் அ.தி.மு.க., நகர் செயலர் கே.கே.அர்ச்சுனன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுனன் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X