பரமக்குடி : புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில்கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
இரண்டு நாட்களாக பரமக்குடி, நயினார்கோவில், போகலுாரில் மழை பெய்கிறது. மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் வைகை ஆறு உள்ளிட்ட தாழ்வானபகுதிகள் மற்றும் கரையோரம் வசிக்கும் மக்களுக்காக பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா உறுப்புக்கல்லுாரி, சமுதாய கூடங்கள் என 21 பாதுகாப்பு மையங்கள் வருவாய் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டறிந்தார். அங்குஉள்ளவர்களுக்கு போர்வை வாங்குவதற்கான நிதியினை எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE