முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தில் மழையால் பஞ்சவர்ணம் 47,என்பவரின் மண்சுவரால் ஆன ஓட்டுவீடு இடிந்து விழுந்து சேதமானது.வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.சேதமடைந்த வீட்டை சப் கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவசங்கரன், தாசில்தார் முருகேசன்,ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்து நிவாரண தொகையாக ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE