கூடலுார்:நீலகிரி எல்லையில் உள்ள, மூன்று மாநில, 'டிரை ஜங்ஷன்' பகுதியில், வன குற்றங்களை தடுப்பதில், தமிழகம், கர்நாடகா, கேரள வனத் துறையினர் பங்கேற்ற முக்கிய கூட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையை ஒட்டி, கேரளா முத்தங்கா வனச்சரணாலயம், கர்நாடகா, பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளன.இப்பகுதியில் வனக் குற்றங்கள், வனத் தீ தடுப்பு பணிகளில், மூன்று மாநில வனத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனை கூட்டம், 'டிரை ஜங்ஷன்' பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில்,வேட்டையாடுதல் உள்ளிட்ட வன குற்றங்களை தடுப்பதிலும்,வன குற்றவாளிகளை பிடிப்பதிலும், தகவல் பரிமாற்றம் மேற்கொள்வது.வனத் தீ தடுப்பது மற்றும் அவசர கால சூழ்நிலையில் மூன்று மாநில வனத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது; நக்சல் நடமாட்டம் இருந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE