பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் தரைப்பால பணி

Added : டிச 03, 2020
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் நீண்ட வருடங்களாக மக்கள் கோரிக்கையாக வைக்கப்படும் கண்ணார் தெரு-கிருஷ்ணராஜபுரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பாரா என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடக்கும் போதெல்லாம் மானாமதுரையில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அனைத்து கட்சி வேட்பாளர்களும்

மானாமதுரை : மானாமதுரையில் நீண்ட வருடங்களாக மக்கள் கோரிக்கையாக வைக்கப்படும் கண்ணார் தெரு-கிருஷ்ணராஜபுரம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பாரா என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடக்கும் போதெல்லாம் மானாமதுரையில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதி கொடுத்து வந்தனர். தி.மு.க., ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தா.கிருஷ்ணன் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்ததோடு சரி,அதற்கு பிறகு வந்த எம்.எல்.ஏ.,க்களும் கோரிக்கை வைத்தாலும் பாலம் கட்டுவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.2019ல் நடைபெற்ற மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி தரைப்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,நாகராஜனும் சட்டமன்றத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பேசியதை அடுத்து 110 விதியின் மானாமதுரையில் பல கோடி செலவில் தரைப்பாலம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்து அதற்கு பொதுப்பணித்துறை சார்பில் நிதி ஒதுக்கியதாகவும் கூறப்படுகின்ற நிலையில் சில மாதங்களுக்கு பாலம் அமைய உள்ள இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் பரிசோதனை எடுத்து சென்ற நிலையுடன் உள்ளது.

முதல்வர் பழனிசாமி பொதுமக்களின் நீண்ட வருட கோரிக்கையான இந்த தரைப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை உடனடியாக நடத்தி பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X