சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிண்டல் செய்த மூவர் எரித்த பூஜாரி கைது

Added : டிச 03, 2020
Share
Advertisement
நாகர்கோவில்:கோவிலில் பூஜை செய்வதை கிண்டல் செய்த மூவர் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த, பூஜாரி கைது செய்யப்பட்டார்.குமரி மாவட்டம், நாகர்கோவில் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர்கள், வெங்கடேஷ், 40; சதீஷ், 40; காளி, 40. நண்பர்களான இவர்கள், நேற்று காலை சன்னிதி தெரு நுாலகம் முன் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, நுாலகத்தின் எதிரே வசிக்கும் ராஜசேகரன், 40 என்பவர், மூன்று பேர் மீதும் பெட்ரோல்

நாகர்கோவில்:கோவிலில் பூஜை செய்வதை கிண்டல் செய்த மூவர் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த, பூஜாரி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர்கள், வெங்கடேஷ், 40; சதீஷ், 40; காளி, 40. நண்பர்களான இவர்கள், நேற்று காலை சன்னிதி தெரு நுாலகம் முன் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, நுாலகத்தின் எதிரே வசிக்கும் ராஜசேகரன், 40 என்பவர், மூன்று பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். மூவர் உடலிலும் தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, மூவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ராஜாக்கமங்கலம் போலீசார், ராஜசேகரனை பிடிக்க முயன்றபோது, வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மீதும், பெட்ரோல் ஊற்றினார். அவரை போலீசார் கைது செய்தனர். ராஜசேகரன் கோவிலில் பூஜை செய்வதை கிண்டல் செய்ததால், மூவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X