பொது செய்தி

தமிழ்நாடு

 திருப்புவனத்தில் வேலைவாய்ப்பு இல்லை

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்சாலை வேலைவாய்ப்பு ஏதுமின்றி படித்த இளைஞர்கள் ஜவுளி கடைகளில் வேலைக்கு சென்று வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய பேரூராட்சி திருப்புவனம் பேரூராட்சி ஆகும், திருப்புவனம் நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதுதவிர சுற்றுவட்டாரத்தில் 45 ஊராட்சிகளைச்

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்சாலை வேலைவாய்ப்பு ஏதுமின்றி படித்த இளைஞர்கள் ஜவுளி கடைகளில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய பேரூராட்சி திருப்புவனம் பேரூராட்சி ஆகும், திருப்புவனம் நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதுதவிர சுற்றுவட்டாரத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 163 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் 20 ஆண்டுகளாக எந்த வித தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த தொழில்களும் இல்லை.

இப்பகுதியில் இயங்கி வந்த பேப்பர் மில், டெக்ஸ்டைல் மில் போன்றவை மூடப்பட்டு விட்டன. படித்த ஆண்களும், பெண்களும் மதுரையில் உள்ள பிரபல துணி கடைகளில் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவோ அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை. போதிய தொழில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மாவட்டத்தில் திருப்புவனத்தில் தான் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. தென்னை சார்ந்த தொழில்கள் ஏதும் இல்லை, கயிறு தயாரிப்பு, தென்னந்தட்டிகள் தயாரிப்பு போன்ற எந்த தொழில்களுக்கும் வரவேற்பு இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு, தென்னை மரங்களில் நோய் தாக்குதல், நகர் விரிவாக்கம், நான்கு வழிச்சாலை உள்ளிட்டவற்றால் தென்னை மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களும், புதிய தொழிற்சாலைகளும் இல்லாததால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல் வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X