பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மயங்கிய முதியவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டில் இரவில் விபத்தில் சிக்கி மயங்கிய முதியவருக்கு முதலுதவி அளித்துபாதுகாப்பு வாகனத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார். சிகிச்சை பலனின்றி மதுரை மருத்துவமனையில் அவர் இறந்தார்.சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி இன்று வருவதையொட்டி நேற்று முன்தினம் ஆய்வு செய்ய தமிழக

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டில் இரவில் விபத்தில் சிக்கி மயங்கிய முதியவருக்கு முதலுதவி அளித்துபாதுகாப்பு வாகனத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார். சிகிச்சை பலனின்றி மதுரை மருத்துவமனையில் அவர் இறந்தார்.

சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி இன்று வருவதையொட்டி நேற்று முன்தினம் ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிவகங்கை வந்தார். ஆய்வு முடிந்து இரவு 8:00 மணிக்கு சிவகங்கையிலிருந்து காரில் புதுக்கோட்டை புறப்பட்டார். திருப்புத்துார் பைக்குடி விலக்கு ரோடு அருகில் சென்ற போது ரோட்டில் சைக்கிளுடன் முதியவர் மயங்கி கிடப்பதை அமைச்சர் பார்த்தார்.

வாகனத்தை நிறுத்திமுதியவரை பரிசோதித்தார். காயமடைந்த அவரை துாக்கி நெஞ்சில் அமுக்கி மூச்சை சீராக்க முயன்றார். முறிந்த காலையும் துண்டுகளால் கட்டினார். பாதுகாப்பிற்கு வந்தபோலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

மழை துாறலுடன் ரோட்டில் நடமாட்டம் இல்லாத நிலையில் இரவில் அமைச்சரின் மனிதாபிமான முதலுதவி பலரையும் பாராட்ட வைத்துள்ளது. இது குறித்து வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணையில் சைக்கிளில் வந்த முதியவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே தள்ளியதும், முதியவர் பட்டமங்கலத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் பெரியண்ணன் 55 என்பவர் என்பதும் தெரியவந்தது.மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X