சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி் சில வரிகளில்...

Added : டிச 03, 2020
Share
Advertisement
ரூ.1.50 கோடிக்கு மாடு விற்பனைஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 400 பசுக்கள், 200 எருமைகள், 50 கன்றுகள் வந்தன. 'புரெவி' புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், விற்பனைக்காக மாடுகள் வரத்தானது.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா,

ரூ.1.50 கோடிக்கு மாடு விற்பனை

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 400 பசுக்கள், 200 எருமைகள், 50 கன்றுகள் வந்தன. 'புரெவி' புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், விற்பனைக்காக மாடுகள் வரத்தானது.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனர். 2.50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்தது.

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில், 108 திவ்ய தலங்களில் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக, இங்குள்ள பெரிய மலையில் இருக்கும் யோகநரசிம்மரை தரிசிக்க, 'ஆன்லைன்' மூலம், 'இ - பாஸ்' பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுகிறது. தற்போது, தினமும், 900 பேருக்கு மட்டுமே இ - பாஸ் வழங்கப்படுகிறது. நிறைய பேருக்கு இ - பாஸ் குறித்து தெரியவில்லை. இதனால், இ - பாஸ் பெறாமல் வரும் பக்தர்களை, மலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

டில்லி புறப்பட்ட விவசாயிகள் கைது

திருச்சி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டில்லி எல்லையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, நேற்று காலை, திருச்சியில் இருந்து, விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள், ரயிலில் புறப்பட்டனர். விவசாய சங்கத்தினர், 29 பேரை, போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

ஊராட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி தலைவராக நாகமணி உள்ளார். மொத்தம், 12 வார்டுகள் உள்ளன. இதில், 2, 3வது வார்டு உறுப்பினர்கள் தவிர்த்து, மற்ற 10 பேர், நேற்று காலை தங்கள் உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடம் கடிதம் கொடுத்தனர். ஊராட்சி நிர்வாகத்தில், நாகமணியின் கணவர் வெங்கடேசன் தலையீட்டால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும். இதுவரை, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை' என்றனர்.

சுவர் இடிந்து சிறுமி பலி

பெரம்பலுார்: பெரம்பலுார், பசும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 33; மனைவி திரிசடை, 28. இவர்களுக்கு, யோஜனா, 7, உட்பட மூன்று குழந்தைகள். வெங்கடேஷ், சென்னையில் வேலை பார்த்து வருகிறார். திரிசடை, குழந்தைகளுடன், கிராமத்தில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, பரவலாக மழை பெய்தது. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் திரிசடை ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. யோஜனா தலை மீது சுவர் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திரிசடை மற்றும் இரண்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.

கைதி தற்கொலை

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரணிவள்ளல், 31. இவர், 300 கிலோ கஞ்சா கடத்தியதாக, குண்டர் சட்டத்தில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம், தான் அடைக்கப்பட்டிருந்த செல்லில், பரணிவள்ளல் கைலியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'என் மனைவி மும்தாஜ்பேகம், என்னை ஜாமினில் எடுக்க மறுக்கிறார். என் இறப்புக்கு மனைவியே காரணம். உடலை என் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X