சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணங்கள் மூலம் 2,380 சதுர அடி நிலம் மோசடி

Added : டிச 03, 2020
Share
Advertisement
சிவகங்கை : காரைக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் 2,380 சதுர அடி நிலத்தை மோசடி செய்ததாக, 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவுபோலீசார் வழக்குபதிந்தனர்.காரைக்குடி மேலஊரணி வாய்க்கால் தெரு வெங்கடேச பெருமாள். இவர், புதுக்கோட்டை மாவட்டம் அழிஞ்சியேந்தலை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள 2380 சதுர அடி இடத்தை,போலி ஆவணங்களை

சிவகங்கை : காரைக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் 2,380 சதுர அடி நிலத்தை மோசடி செய்ததாக, 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவுபோலீசார் வழக்குபதிந்தனர்.

காரைக்குடி மேலஊரணி வாய்க்கால் தெரு வெங்கடேச பெருமாள். இவர், புதுக்கோட்டை மாவட்டம் அழிஞ்சியேந்தலை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள 2380 சதுர அடி இடத்தை,போலி ஆவணங்களை தயாரித்து, போலி நபரை 2010 ஜூலை 12 ம் தேதி காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, பத்திரபதிவு செய்தனர்.அந்த நிலத்தை வடகுடியை சேர்ந்த செல்லத்துரைக்கு விற்பனை செய்தும், அவரிடமிருந்து தேவகோட்டை தெற்கு காலனி ஜிப்ரிக் அலிக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதை அறிந்த சுப்பிரமணியன், காரைக்குடி சார்பதிவாளரிடம் புகார் அளித்தார். அவர் சிவகங்கை எஸ்.பி.,ரோஹித்நாதனிடம் அளித்த புகாரின்பேரில், போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பதிந்து மோசடி செய்ததாக வெங்கடேச பெருமாள், செல்லத்துரை, ஜிப்ரிக் அலி ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவுஇன்ஸ்பெக்டர் பாரதிபிரியா, எஸ்.ஐ., முத்துப்பாலு வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X