திருப்புவனம் : திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் நகர் மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய தேவை அனைத்திற்கும் திருப்புவனத்தை நம்பி உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் சாலையோர கடைகள் முன்பு நின்று பஸ் ஏறி இறங்குகின்றனர். திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் துப்பாக்கி சூடு வரை வந்தும் இன்று வரை பஸ் ஸ்டாண்ட் அமைப்பது கானல் நீராகவே உள்ளது.
சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் வெளியூர் சென்று விட்டு திரும்புபவர்கள் சாலையோரம் வெயிலிலும் மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.திருப்புவனத்தை மையமாக வைத்து 45 நகர பேருந்துகள் இயங்குகின்றன. இதுதவிர மதுரை நகரில் இருந்தும் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் அமைந்திருப்பதால் தினசரி பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, ராமேஸ்வரம், மதுரை, சிவகங்கை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்புவனத்திற்கு வந்து செல்கின்றன.
40 வருடங்களாக பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.மேலும் அவசரத்திற்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்களை நிறுத்தி விட்டு செல்லவும் பஸ் ஸ்டாண்ட் இல்லை. பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் மதிய நேரத்தில் அனைத்து பஸ்களும் டெப்போவிற்கு சென்று திரும்புவதுடன் போக்குவரத்து கழக ஊழியர்களும் பணி மாற்றும் போது ரோட்டில் நின்றே மாறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE