காரைக்குடி : காரைக்குடியில் விமான நிலையம் அமைத்தல், சார்பு நீதிமன்றம், சம்பை ஊற்றை பாதுகாத்தல் தொடர்பாக மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த ஆட்சி வந்தால் சரியாகி விடும், இந்த ஆட்சி வந்தால் சரியாகி விடும் என்ற மக்களின் நம்பிக்கை வெறும் கனவாகவே காற்றில் பறக்கிறது. தங்களது நீண்ட நாள் கோரிக்கையை தற்போதைய ஆட்சியாளர்களாவது நிறைவேற்றுவார்களா என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
சார்பு நீதிமன்றம் தேவை
சாமிதிராவிட மணி, தொழில்வணிகக் கழகத் தலைவர், காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர். மிகப்பெரிய ஊராட்சியானசங்கராபுரம் ஊராட்சியும் பேரூராட்சி தகுதிக்கு வளர்ந்துள்ளது. காரைக்குடியை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்துகாரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொழில்வணிகக் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் 2019நவம்பரில் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுவரை, எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலை தொடர்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து, தற்போதுவரை தேவகோட்டையில் சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.சிவில் வழக்குகளே இங்கு அதிகம் நடக்கிறது. அதில், 80 சதவீதம்சிவில் வழக்குகள் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்களின்வழக்குகளாகவே உள்ளது. பல ஆண்டுகளாக, காரைக்குடிமக்கள் தேவகோட்டைக்கும் காரைக்குடிக்கும் தங்களதுவழக்குகளுக்காக அலைகின்றனர்.இதனை தவிர்க்க தேவகோட்டை போலவே,காரைக்குடியிலும் தனி சார்பு நீதிமன்றம் கொண்டுவரவேண்டும்.
பாதுகாப்பில்லாத சம்பை ஊற்று-
வேணுகோபால், சம்பை ஊற்று பாதுகாப்பு இயக்கம், காரைக்குடி:காரைக்குடி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக சம்பைஊற்று உள்ளது. அழகப்பா பல்கலை., சம்பை ஊற்று ஆகிய இரண்டும்காரைக்குடியின் இரண்டு கண்கள் போன்றது. இதனை நம்பி, பலமாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள்காரைக்குடிக்கு வருகின்றனர். கோவிலுார் அருகேஉள்ள சம்பை ஊற்று தலைமை நீரேற்று நிலையத்தில் 13 போர்வெல்அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் வரை குடிநீர்எடுக்கப்படுகிறது.
நகராட்சி மூலம், நாள் ஒன்றுக்கு 1 கோடியே 18லட்சம் லிட்டர் வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த சம்பை ஊற்றை சுற்றிலும், தொழிற்சாலைகள், வாட்டர்வாஸ் கம்பெனிகள் பெருகி விட்டது. இதில் வெளியாகும் கழிவுநீர்மற்றும் தொழிற்சாலை கழிவு நிலத்தடியில் கலக்கிறது. இதனால்,சம்பை ஊற்று அமைந்துள்ள நிலத்தடியில் 170 அடி ஆழம் வரைபாதிப்பின் பிரதிபலிப்பு உள்ளதாக மத்திய நிலத்தடி நீர் ஆய்வுக்குழுதெரிவிக்கிறது. குடிநீரின் தன்மை முற்றிலும் மாறி,பின்வரும் சந்ததிகளின் குடிநீர் ஆதாரமே கேள்விக்குறியாகி விடும். எனவே, காரைக்குடி மக்களின் இதயமாக உள்ள சம்பை ஊற்றைகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேண்டும் ஒரு விமான நிலையம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி.உலகத்தின் பல நாடுகளிலும் வணிகம் செய்து,அதனை செயல்படுத்தியவர்கள் செட்டிநாட்டு மக்கள்.இப்பகுதியிலிருந்து செட்டிநாட்டு உணவு பண்டங்கள்,ஆத்தங்குடி டைல்ஸ்,அரியக்குடிவிளக்குகள் என பல்வேறு பொருட்களும் பல்வேறு நாடுகளுக்கும்ஏற்றுமதியாகிறது. செட்டிநாட்டில், உள்நாட்டு விமானநிலையம் அமைக்க பல ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்துவலியுறுத்தி வருகின்றனர்.ஆதிஜெகநாதன், சமூக ஆர்வலர்
காரைக்குடி பகுதியில், விமான நிலையம் அமைக்க கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். செட்டிநாட்டில் 1907ஏக்கரில் இயங்கி வரும் கால்நடைப் பண்ணையில், இரண்டாம்உலகப்போர் நடந்தபோது விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.இது தற்போது வரை சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மதுரைஏர்போர்ட் ஆப் இந்தியா அதிகாரிகள் செட்டிநாடு கால்நடைபண்ணையில் ஆய்வு செய்து அதற்கான அறிக்கையையும் மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளது. மேலும், இப்பகுதி விமான நிலையம்அமைக்க அனைத்து புவியியல் அமைப்புகளையும் பெற்றிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிசெட்டிநாட்டில் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதுவரை எவ்விதஅறிவிப்பும் வெளிவரவில்லை. எனவே, இப்பகுதியில், விமானநிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE