சேலம்:''அ.தி.மு.க., அரசில் ஊழல் என, ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். ஊழலுக்காக, கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க., ஆட்சி தான். அதனால், ஊழல் குறித்து பேச, ஸ்டாலினுக்கு தகுதிஇல்லை,'' என, முதல்வர், பழனிசாமி., தெரிவித்தார்.
சேலம் பயணியர் மாளிகையில், மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர், பழனிசாமி., அளித்த பேட்டி:அ.தி.மு.க., அரசில் ஊழல் என, ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்டது என்றால், அது தி.மு.க., ஆட்சிதான். அதனால், ஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதிஇல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்து திட்டப் பணிகளும் விதிமுறைப்படிதான் நடக்கின்றன. மீத்தேன் திட்டத்தை கொண்டு வர ஒப்பந்தம் போட்டது, தி.மு.க., அதை நாங்கள் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம். வேளாண் சட்டத்தில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முகவர்களிடம் இருந்து காப்பாற்றி, அதிக லாபத்தை கொடுக்கிறது.
கனிமொழி பிரசாரத்தை, என் தொகுதியில் துவங்குவதாக கூறி, நான் எதுவும் செய்யவில்லை என பேசியுள்ளார். இதுவரை இல்லாத அளவு, என் தொகுதியில் நலத்திட்ட பணிகள் நடந்து உள்ளன. இதை மக்களிடம் கேட்டாலே தெரியும். பா.ம.க., செயல்பாட்டை பொறுத்தவரை, கூட்டணி கட்சியாக இருந்தாலும், கொள்கைகள் வேறு. அதை, அவர்கள் விட்டுக் கொடுக்க முடியாது. நாங்களும் தலையிட முடியாது. ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கூட்டணியாகவே நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE