பொது செய்தி

இந்தியா

பணக்கார பெண் தொழில் அதிபர்கள் :'ஹெச்.சி.எல்.ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா முதலிடம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
மும்பை:நாட்டின் 100 பணக்கார பெண் தொழில் அதிபர்களின் பட்டியலில் 'ஹெச்.சி.எல். டெக்னாலஜில்' நிறுவனத்தின் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.நாட்டின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை 'ஹுரன் இந்தியா' மற்றும் 'கோட்டக் வெல்த்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இதில் 'ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்' நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி மல்ஹோத்ரா முதலிடம்

மும்பை:நாட்டின் 100 பணக்கார பெண் தொழில் அதிபர்களின் பட்டியலில் 'ஹெச்.சி.எல். டெக்னாலஜில்' நிறுவனத்தின் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

நாட்டின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை 'ஹுரன் இந்தியா' மற்றும் 'கோட்டக் வெல்த்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இதில் 'ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்' நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி மல்ஹோத்ரா முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 54 ஆயிரத்து 850 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக 'பயோகான்' நிறுவனத்தை சேர்ந்த கிரண் மஜூம்தார் ஷா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 36 ஆயிரத்த 600 கோடி ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில் வெளியிடப்பட்ட 100 பணக்கார பெண்களில் 31 பேரின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாயை தண்டியுள்ளது.இதில் சுயமாக தொழில் துவங்கி அதில் முன்னுக்கு வந்தவர்கள் பிரிவில் 'பயோகான்' நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா முன்னிலை வகிக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக 'ஸோஹோ' நிறுவனத்தின் ராதா வேம்பு 11 ஆயிரத்து 590 கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.'அப்பல்லோ ஹாஸ்பிடல்' குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்களும் 'கோத்ரெஜ்' நிறுவனத்தை சேர்ந்த மூன்று பெண்களும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X