சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாமினில் வந்த தி.மு.க., பிரமுகர் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை

Added : டிச 04, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிக்கொலை செய்து, ஜாமினில் வந்த, தி.மு.க., பிரமுகர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திருவண்ணாமலை நகர, அ.தி.மு.க., செயலராக இருந்தவர் கனகராஜ், 52. இவருடன் இணைந்து, தி.மு.க., பிரமுகர் பங்க் பாபு, 53, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாபு பிரிந்து சென்று, தனியாக தொழில்

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிக்கொலை செய்து, ஜாமினில் வந்த, தி.மு.க., பிரமுகர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை நகர, அ.தி.மு.க., செயலராக இருந்தவர் கனகராஜ், 52. இவருடன் இணைந்து, தி.மு.க., பிரமுகர் பங்க் பாபு, 53, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாபு பிரிந்து சென்று, தனியாக தொழில் செய்து வந்தார்.கடந்த, 2017 ஜன., 12ல், கனகராஜ், தன் நண்பருடன் பைக்கில் சென்றபோது, பாபு மற்றும் மூன்று பேர் சேர்ந்து, கனகராஜை வெட்டி கொலை செய்தனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன், பாபு ஜாமினில் வந்து, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு பழைய பைபாஸ் சாலையில், தன் வீட்டின் அருகே உள்ள கடையில், பாபு டீ குடிக்க சென்றார்.அப்போது, அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி, பைக்கில் தப்பி சென்றது. இதில், பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், கொலையாளிகளை தேடி வருவதாகவும், திருவண்ணாமலை போலீசார் தெரிவித்தனர்.பாபு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X