முதல்வருடன்அமித் ஷா பேச்சு
சென்னை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று தொலைபேசியில், முதல்வர் இ.பி.எஸ்.,சை தொடர்பு கொண்டு பேசினார். 'புரெவி' புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்துகேட்டறிந்தார்.தமிழக அரசு எடுத்துள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை விபரங்களை, முதல்வரும் எடுத்துரைத்தார். அதைக் கேட்ட அமித்ஷா, 'தமிழகத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
ரூ.65 கோடிகேட்கும் வாரியம்
சென்னை:தமிழகத்தில், நவம்பர் இறுதியில், 'நிவர்' புயல் வீசியது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் இருந்த, 980 'பீடர்' எனப்படும், மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டன.அந்த வழித்தடங்களில் இருந்த, 8,000 மின் கம்பங்கள்; 250 'டிரான்ஸ்பார்மர்'கள் உள்ளிட்ட மின் வினியோக சாதனங்களும் சேதமடைந்தன. மின் வாரியத்திற்கு, 65 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொகையை, நிவாரணமாக வழங்கும்படி, தமிழக அரசிடம் மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
எஸ்.பி.ஐ., சேவைபாதிப்பு
சென்னை:எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ.,யில், மூன்று நாட்களாக, ஆன்லைன் வங்கி சேவை தடைபட்டுள்ளது. ஆன்லைன் வங்கிக்கான, யோனோ செயலியும் செயல்படாததால், பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியவில்லை.யாருக்கும் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை, வங்கி நிர்வாகம்உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, யோனோ செயலி செயல்படவில்லை. விரைவில், செயல்படும்' என, வங்கி அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE