சேலம்:'பார்சல் சர்வீஸ்' நிறுவனங்கள், 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தமிழகத்தில், முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்கள் இடையே, தினமும், 'பார்சல்' பரிமாற்றத்தில், 1,000க்கும் மேற்பட்ட லாரிகள், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகின்றன.இந்த லாரிகளுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை, காலாண்டு வரி, டீசல், டயர் உள்ளிட்ட உதிரிபாக விலை உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால், 'பார்சல்' கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சேலத்தில் இருந்து சென்னைக்கு, ஒரு கிலோ முதல், 10 கிலோ வரையான பார்சலுக்கு, 100 ரூபாயாக இருந்த கட்டணம், 120 ரூபாயாகவும், 10 கிலோவுக்கு மேல், 50 கிலோ வரை, 250 ரூபாயாக இருந்தது, 300 ரூபாயாகவும், அதற்கு மேல், 100 கிலோ வரை, 500 ரூபாயாக இருந்தது, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எடை அடிப்படையில், 20 சதவீதம் வரை, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல், 'கூரியர்' நிறுவனங்கள், நகரங்களின் தொலைவு அடிப்படையில், பழைய கட்டணத்தில் இருந்து, 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE