பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி விற்பனையகம் திட்டம் என்னாச்சு? காந்தி மார்க்கெட் அருகே அமைக்க கோரிக்கை

Added : டிச 04, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள காலியிடம், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புதர்களை சுத்தப்படுத்தி மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் கட்டுமானப்பணிக்காக, ஆட்டுத்தோல் சந்தை செயல்பட்ட பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தற்காலிகமாக
 இறைச்சி விற்பனையகம் திட்டம் என்னாச்சு? காந்தி மார்க்கெட் அருகே அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள காலியிடம், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புதர்களை சுத்தப்படுத்தி மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் கட்டுமானப்பணிக்காக, ஆட்டுத்தோல் சந்தை செயல்பட்ட பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தற்காலிகமாக மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.அதன் பின், மார்க்கெட் கட்டுமானப்பணி முடிந்ததும் சந்தை மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த இடத்தில் வாகன கழிவுகள் குவிக்கப்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது.மேலும், அந்த இடத்தில் உள்ள பொட்டி கடைகளை சுற்றிலும் புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.மார்க்கெட் அருகே உள்ள காலியிடத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. நகராட்சியில், 50க்கும் மேற்பட்ட கோழி கடைகள், 30க்கும் மேற்பட்ட ஆடு இறைச்சி கடைகள், மீன்கடைகள், மாட்டு இறைச்சி கடைகளும் உள்ளன.அதில், மீன் இறைச்சி, கருவாடு கடைகள், காந்தி மார்க்கெட், தேர்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும்; ஆடு, கோழி இறைச்சி கடைகள் நகரில் பல இடங்களிலும்; மாட்டிறைச்சி கடைகள் கோட்டூர் ரோடு பகுதிகளிலும் செயல்படுகிறது.நகரின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மீன் கடைகள் மட்டுமின்றி அனைத்து இறைச்சி கடைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த இறைச்சி விற்பனையகம், அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், அந்த திட்டம் ஆலோசனை அளவிலே கைவிடப்பட்டுள்ளது.காந்தி மார்க்கெட் பகுதியில் சுகாதாரமின்றி காணப்படும் காலியிடத்தை சுத்தம் செய்வதுடன், ஒருங்கிணைந்த இறைச்சி விற்பனையகம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X