பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி குறைபாடு குழந்தைகளுக்கு சேவைசெய்ய அமர் சேவா சங்கத்திற்கு அரசு நிதி

Added : டிச 04, 2020
Share
Advertisement
மதுரை:திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் 23 ஒன்றியங்களில் வளர்ச்சி படிநிலை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு சேவை வழங்க ஆய்க்குடி அமர் சேவா சங்கத்திற்கு தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது.திட்ட இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா, சங்க செயலாளர் சங்கரராமன் சீனிவாசன், ஊடக தொடர்பாளர் அரவிந்த் பரத்வாஜ் கூறியதாவது:தொழில் நுட்பம் மூலம் சங்கம் வழங்கிய

மதுரை:திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் 23 ஒன்றியங்களில் வளர்ச்சி படிநிலை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு சேவை வழங்க ஆய்க்குடி அமர் சேவா சங்கத்திற்கு தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது.

திட்ட இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா, சங்க செயலாளர் சங்கரராமன் சீனிவாசன், ஊடக தொடர்பாளர் அரவிந்த் பரத்வாஜ் கூறியதாவது:தொழில் நுட்பம் மூலம் சங்கம் வழங்கிய மறுவாழ்வு சேவையில் பலன் கிடைத்துள்ளது. 2017ல் நெல்லை, தென்காசியில் 8 கிராம குழந்தைகளுக்கு வழங்கிய சேவையில் உளவியல், உணர்ச்சி, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. இக்குழந்தைகளுக்கு செலவாகும் நிதி குறைந்துள்ளது என 75 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பணியாளர்கள் 'எனபளிங் இன்க்லுஷன்' அலைபேசி செயலி வழி பெற்றோர், தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு ஆய்வு செய்வர். இதனால் குழந்தைகள் வீட்டில் இருக்கும் நிலையிலேயே உதவி, பயிற்சி, சிகிச்சை கிடைக்கும்.நம் நாட்டில் 6 வயதிற்கு கீழ் உள்ள 23 லட்சம் குழந்தைகளுக்கு இக்குறைபாடு உள்ளது. 1 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் உள்ளனர்.

ஆரம்ப பயிற்சி, மறுவாழ்வு சேவையால் உடல், அறிவாற்றல், தகவல் பரிமாற்றம் சமூகப் பங்கேற்பு, உணர்வு வெளிப்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.அமர் சேவா சங்க செயலியால் கிடைத்த பலன்களை கண்ட தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் 23 ஒன்றியங்களில் இத்திட்டம் துவங்க நிதி உதவி செய்துள்ளது. 2021 இறுதியில் திட்டத்தின் கீழ் 3000 குழந்தைகள் கொண்டு வரப்படுவர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X