வால்பாறை:வால்பாறை மலைப்பாதையில், சாலையோரம் பூத்துக்குலுங்கும் 'ரெட் லீப்' மலர்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து செல்கின்றனர்.வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு, வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்நிலையில், வாட்டர்பால்ஸ் பகுதியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையை அலங்கரிக்கும் வகையில், சிகப்பு நிறத்தில் 'ரெட் லீப்' மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த மலர்களை சுற்றுலாபயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்த வகை மலர்களில் மணம் இருக்காது; ஆனால், காண்போரை கவரும் அழகு மிகுந்தவை. இந்த சிகப்பு நிற பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.இது குறித்து, உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'மலைப்பகுதியில் மட்டுமே இந்த வகை பூக்கள் மலர்கின்றன. 'ரெட் லீப்' மலர்கள் தேயிலை எஸ்டேட்களில் சாலையை அலங்கரிக்க வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இந்த பூக்கள் பூத்துக்குலுங்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE