பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 04, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:வடக்கிபாளையத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, 130 ரூபாய் விலை கிடைத்தது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஏலம் நடந்தது. முதல்தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 122.79 முதல், 130 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை, 14 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 102.99 முதல், 120

பொள்ளாச்சி:வடக்கிபாளையத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, 130 ரூபாய் விலை கிடைத்தது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஏலம் நடந்தது. முதல்தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 122.79 முதல், 130 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை, 14 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 102.99 முதல், 120 ரூபாய் விலை கிடைத்தது. ஏலத்தில், 12 விவசாயிகள்; ஏழு வியாபாரிகள் பங்கேற்றனர்.கண்காணிப்பாளர் கூறுகையில், ''ஏலத்தில், கொப்பரைக்கு கூடுதலாக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக, தரமான கொப்பரை உற்பத்தி இல்லாததால், வரத்து குறைந்தது. மார்க்கெட்டில் கொப்பரை தேவை அதிகமுள்ளதால், விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X