மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன. முறையாக பேக்கிங் செய்வது, கழிவுகளை அழிப்பது உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத அளவில், 90 சதவீதம் இக்கடைகள் செயல்படுகின்றன.இதில், மீதமாகும் கழிவுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், சுகாதாரக்கேடு உருவாகும்படியும் பல இடங்களில் கொட்டப்படுகின்றன. மடத்துக்குளம் ரயில்வே கேட் பகுதியிலுள்ள குமரலிங்கம் ரோட்டில், பல மூட்டை இறைச்சிக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன.வாகனங்கள் இதன்மீது ஏறிச்செல்வதால், மூட்டையிலிருந்து கழிவுகள் வெளியாகி பரவிக்கிடக்கிறது. இதனால் இந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகளுக்காக வரும் நாய்களால் விபத்துக்கள் நடந்துள்ளன.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:இறைச்சிக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த கடைகளில் விதி முறைகள் பின்பற்றப்படுவது இல்லை. கழிவுகளை மூட்டையில் எடுத்து வந்து, ரோடு மற்றும் பொது இடங்களில் வீசிச்செல்கின்றனர். இதனால்,நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.எனவே, இதுகுறித்து அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். ரோடுகளில் இறைச்சிக்கழிவு மூட்டைகளை வீசி செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE