மதுரை:''அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது:
கொரோனா காலத்திலும் அரசு துறை ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துஉள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் போகலுார் ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என பா.ஜ., நிர்வாகிகள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி படம் வைக்க வேண்டும் என பி.டி.ஓ., தெரிவித்துஉள்ளார்.
ஆனால் பா.ஜ.,வினர் அலுவலர்களை தாக்க முயன்று, அரசு வாகனத்திலுள்ள முத்திரையை அவமரியாதை செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணி செய்திட பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE