பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வுக்கு கண்டனம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
மதுரை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி நடத்தும் போராட்டம் 81 சதவீதம் ஓ.பி.சி., இன மக்களுக்கு எதிரான செயலாகும் என அகில இந்திய ஓ.பி.சி., நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.நிறுவனர் ராஜ்மோகன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 263 ஜாதிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய ஓ.பி.சி., பிரிவினருக்கு

மதுரை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி நடத்தும் போராட்டம் 81 சதவீதம் ஓ.பி.சி., இன மக்களுக்கு எதிரான செயலாகும் என அகில இந்திய ஓ.பி.சி., நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிறுவனர் ராஜ்மோகன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 263 ஜாதிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

மொத்த மக்கள் தொகையில் 81 சதவீதம் ஓ.பி.சி., வாக்காளர் உள்ளனர். ஓ.பி.சி., பிரிவிலுள்ள அனைத்து ஜாதியினரும் ஓரணியில் திரண்டால் 2021ல் சட்டசபை தேர்தலில் பா.ம.க., வெற்றி பெறுவது கடினம். அ.தி.மு.க., அல்லது தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால் அந்த கூட்டணி வெற்றி பெறுவது கடினம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X