பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மழை பெய்வதால், வியாபாரிகள் பங்கேற்பு இல்லாமல், காய்கறிகள் விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், அதிகளவு தக்காளி மற்றும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை, பொள்ளாச்சி மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். நேற்று காலை, மழை பெய்ததால், காய்கறிகள் ஏலம் விடுவதில் சிரமம் ஏற்பட்டது.வியாபாரிகள் குறைந்த அளவில் பங்கேற்றதால், மந்தமாக நடந்த ஏலத்தில் காய்கறிகள் விலை சரிந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.தக்காளி வரத்து அதிகம் இருந்த நிலையில், வியாபாரிகளிடையே போட்டி இல்லாததால், 15 கிலோ எடைகொண்ட ஒரு கூடை தக்காளி - 150 ரூபாய்க்கு விற்பனையானது. இரு நாட்களுக்கு முன், 230 ரூபாய்க்கு விற்றது. குறிப்பிடத்தக்கது.அதேபோன்று, கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் ஆகியன, நேற்று, 10 ரூபாய்க்கு விற்றது. பச்சை மளகாய் கிலோ - 20 ரூபாய், முள்ளங்கி, 20 கிலோ பை - 150 ரூபாய், 30 கிலோ எடைகொண்ட பீட்ரூட் - 300 ரூபாய்க்கும் விற்றது.காய்கறிகள் வரத்து அதிகம் இருந்த நிலையில், வியாபாரிகள் பங்கேற்பு இல்லாததால், ஏலத்தில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE