கோவை;கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கான மருத்துவ பணியாளர்களின் தகவல்களை, தனியார் மருத்துவமனைகள் தர மறுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசியை, முதல் கட்டமாக அரசு, தனியார் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார துறை பணியாளர்களுக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, மாவட்டம் வாரியாக, அரசு, தனியார் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்றுவோரின் விபரங்களை சேகரித்து, அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட சுகாதார துறையினருக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.கடந்த நவ.,ல் இருந்து, விபரம் சேகரிக்கும் பணியில், சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் தகவல் தர மறுப்பதால், பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.சுகாதார துறையினர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் உட்பட, 104 சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில், பணியாற்றுவோரின் ஆதார் எண், அவர்களின் உடல்நிலை மற்றும் வேறு பாதிப்புகள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், மொத்தமுள்ள 2,672 தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில், இதுவரை 905 மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மற்ற தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் விபரங்கள் தராமல் தட்டிக்கழிக்கின்றன. இதனால், பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படுமென பயப்படும் மருத்துவமனைகளே, விபரம் தர மறுக்கின்றன. இப்பிரச்னை குறித்து, இந்திய மருத்துவ சங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE