உடுமலை:ஊரக வளர்ச்சித்துறை சார்பில், குடிமங்கலம் ஒன்றியத்தில், புதிதாக கிராம இணைப்பு ரோடு அமைத்தல் மற்றும் மேம்படுத்த, 3.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 23 ஊராட்சிகளில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களை இணைக்கு மண் பாதைகள், பல்வேறு திட்டங்களின் கீழ் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராம இணைப்பு பாதைகளை, தார்ரோடாக மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளியில் இருந்து, கோவை மாவட்டம் ஏ.நாகூர் கிராமத்துக்கு இணைப்பு ரோடு அமைக்க, 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்திலிருந்து, வாகத்தொழுவுக்கு, 41.74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ரோடு மேம்படுத்தப்பட உள்ளது. ஆமந்தகடவு ஊராட்சி அம்மாபட்டியில், 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், வல்லக்குண்டாபுரம் - அம்மாபட்டி - சி.நாகூர் ரோடு மேம்பாடு, வடுகபாளையம் - வேலப்பநாயக்கன்புதுார், முத்துசமுத்திரம் - வடுகபாளையம் உட்பட கிராம இணைப்பு ரோடுகளை மேம்படுத்தவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில், பணிகள் துவங்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE