பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த காலத்துக்கு மோட்டார் வாகன வரி: போக்குவரத்து துறை உத்தரவு

Added : டிச 04, 2020
Share
Advertisement
கோவை;வாகன உரிமையாளர்கள் செலுத்திய மோட்டார் வாகன வரியை, அடுத்தடுத்த காலத்துக்கு மாற்றியமைத்துக்கொள்ள, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா காரணமாக பஸ், லாரி, டாக்ஸி, ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், ஏப்., முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டும், ஜூலை முதல் செப்., வரையிலான இரண்டாம் காலாண்டு வரியும் செலுத்துவதில் சிரமம்

கோவை;வாகன உரிமையாளர்கள் செலுத்திய மோட்டார் வாகன வரியை, அடுத்தடுத்த காலத்துக்கு மாற்றியமைத்துக்கொள்ள, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா காரணமாக பஸ், லாரி, டாக்ஸி, ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், ஏப்., முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டும், ஜூலை முதல் செப்., வரையிலான இரண்டாம் காலாண்டு வரியும் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.வாகனங்கள் ஓடாத காலத்துக்கு, 'ஸ்டாப்பேஜ் பார்ம்' மூலம் விண்ணப்பித்தும், பல்வேறு காரணங்களால் வாகன வரியை, இரு காலாண்டுகளுக்கும் வாகன உரிமையாளர்கள் செலுத்தியுள்ளனர். இந்ந வரியை, அடுத்தடுத்த காலத்துக்கு மாற்றியமைத்துக்கொள்ள, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா சமயத்தில் பொருளாதார பாதிப்பை சந்தித்த, பஸ் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு, இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.போக்குவரத்து துறை சார்பில் ஆர்.டி.ஓ.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வாகன உரிமையாளர்கள் பலர், கடந்த ஜூன், 30 மற்றும் செப்., 30ம் தேதி என இரு காலாண்டுகளுக்கு மோட்டார் வாகன வரி செலுத்தியுள்ளனர்.தவறுதலாக செலுத்தியதை உணர்ந்த வாகன உரிமையாளர்கள், அதனை அடுத்தடுத்த காலத்துக்கு மாற்றித்தருமாரு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இக்காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வாகன வரியை. அடுத்தடுத்த காலத்துக்கு மாற்றியமைத்து சரிசெய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X