பொது செய்தி

தமிழ்நாடு

கோவை வேளாண் பல்கலையில்  காளான் வளர்ப்பு பயிற்சி துவக்கம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை வேளாண் பல்கலையில், நாளை (5ம் தேதி) காளான் வளர்ப்பு குறித்த நேரடி பயிற்சி மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காளானுக்கான தேவை அதிகம் உள்ளது. சத்து மிக்க வைச உணவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவு என்பதால், அனைத்து வயதினரும் காளான் உணவை எடுத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், காளான் உற்பத்தி, குறைந்த

பொள்ளாச்சி:கோவை வேளாண் பல்கலையில், நாளை (5ம் தேதி) காளான் வளர்ப்பு குறித்த நேரடி பயிற்சி மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காளானுக்கான தேவை அதிகம் உள்ளது. சத்து மிக்க வைச உணவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவு என்பதால், அனைத்து வயதினரும் காளான் உணவை எடுத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், காளான் உற்பத்தி, குறைந்த முதலீட்டில் லாபமீட்டும் சுயதொழிலாக உள்ளது. இட வசதிக்கு ஏற்ப, காளான் உற்பத்தி செய்யலாம். பூஞ்சை வகை தாவரமான காளான் சாகுபடியை, அறிவியல் பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட மகசூல் பெற முடியும். இதற்கு முறையான பயிற்சி அவசியம்.காளான் வளர்ப்புக்கு பல ஆண்டுகளாக கோவை வேளாண் பல்கலையில் பயிர் நோயியல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா பரவலின் காரணமாக, கடந்த சில மாதங்களாக பயிற்சி நிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் முதல், மீண்டும் பயிற்சி துவங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும், 5ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். இதற்கான கட்டணம், 590 ரூபாயாகும். ஆர்வமுள்ளவர்கள், பல்கலையில் பயிர் நோயியல் துறையை நேரடியாக அணுகி, கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.இனி, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி பயிற்சி நடக்கும் என, பல்கலையின் பயிர் நோயியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422 6611336 என்ற தொலைபேசி எண் அல்லது, pathology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X