சரவணன், கே.கே.புதுார்: அரசியல் பிரவேசம் பத்தாண்டுகளுக்கு முன் செய்திருக்க வேண்டியது. நிறைய பேர் வருகின்றனர். ஆனால், காணாமல் போய் விடுகின்றனர். அரசியலில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு இருந்தும், அதை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அருள், சாய்பாபா காலனி: புலி வருது கதையாக உள்ளது. அவர் வரட்டும்; பின்னர் பார்க்கலாம். தற்போதிருக்கும் நடைமுறையில், எதையும் கூற இயலாது. அரசியலில் அவ்வளவு சீக்கிரம் வெற்றி என்பது கிடைத்து விடாது. சண்முகம், சின்னத்தடாகம்: அரசியலில் மிகவும் தாமதமாக நுழைந்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அவரால், வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே. கமல் கட்சிக்கே போதுமான வரவேற்பு இல்லை. ரஜினி வெற்றி பெறுவது கடினமே. திவ்யா, இடையர்பாளையம்: அவரது அறிவிப்பு வரவேற்க கூடியதுதான். ஆனால், குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம் பிடிப்பது சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. ரஜினியை அனைவருக்கும் தெரியும். அவரது கட்சியினரை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐஸ்வர்யா, கவுண்டம்பாளையம்: ரஜினியின் அறிவிப்பை வரவேற்கிறேன். யாராவது வருவார்களா நல்லது நடக்காதா என, அனைவரும் எதிர்பார்த்திருக்கிறோம். அதை அவர் நடத்துவார் என, நம்புகிறேன். அவரது அறிவிப்பில் உறுதி தெரிகிறது. ஜாபர், குனியமுத்துார்: வித்தியாசமாக செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அரசியலில் பல திறமையானவர்கள் உள்ளனர். அவர்களை மீறி வெற்றி பெறுவது சாத்தியமற்றது. அதையும் மீறி அவர் ஜெயிக்கக்கூடும். ஆனால் கடும் உழைப்பு தேவை.பாஸ்கர், குனியமுத்துார்: முன்னரே வந்திருக்கலாம்.
களத்துக்கே வராமல், பேசிக் கொண்டிருந்தால் அது வெற்றிக்கு வழிவகுக்காது. இவர், 234 தொகுதியிலும் தனித்து போட்டி என்கிறார். வேட்பாளர்களுக்கு ஓட்டு வங்கி உள்ளதா என்பது சந்தேகமே.நந்தகோபால், ராமநாதபுரம்: ரஜினியின் அறிவிப்பை வரவேற்கிறோம். மக்களின் தேவையை அவர் புரிந்து வைத்துள்ளார்.
நான் ஜெயித்தால் மக்கள் ஜெயிப்பது போன்றது; தோற்றால் அது மக்களின் தோல்வி என தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அன்னபூரணி, ஒலம்பஸ்: முன்னாள் முதல்வர் ஜெ., பல முடிவுகளை தைரியமாக எடுத்தவர். அதேபோல் இவரும் நடந்து கொள்ளக்கூடியவர். எனவே அவரது வரவை விரும்புகிறோம். அவர் வந்தால் நல்லாட்சி கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE