கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் பிரிவு அருகே கல்லுக்குழி உள்ளது. இதனை ஒட்டி எம்.ஜி.ஆர்., காலனி குடியிருப்பு உள்ளது. மழையால், கல்லுக்குழியில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.இதனை சுற்றிலும், புதர் மண்டியும் உள்ளதால், கல்லுக்குழி இருப்பதே தெரியாமல் உள்ளது. இதனை ஒட்டி சென்றாம்பாளையம் ரோட்டில் வாகனங்கள் சென்று வருகின்றன. புதிதாக வருபவர்கள் கல்லுக்குழி இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கல்லுக்குழியில் தவறி விழும் அபாயம் உள்ளதால், கல்லுக்குழிக்கு தடுப்பு சுவர் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE