கம்பம்:தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர் நாகமணி கணவர் வெங்கடேசன் தலையீடால் மனஉளைச்சல் ஏற்பட்டதாக 10 வார்டு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜனவரியில் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நாகமணி ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சியின் 2வது, 3வது வார்டு உறுப்பினர்கள் தவிர்த்து அறிவுச்செல்வன் (வார்டு 1), சாந்தி (வார்டு 4), ராதிகா (வார்டு 5), சுதா (வார்டு 6), முத்துக்குமார் (வார்டு 7), ராஜலட்சுமி (வார்டு 8), மணிகண்டன் (வார்டு 9), கன்னையன் (வார்டு 10), சதீஷ் (வார்டு 11), பொம்முராஜ் (வார்டு 12) ஆகிய 10 பேர் நேற்று காலை தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதற்கான கடிதங்களை கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனிடம் கொடுத்தனர். ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் வெங்கடேசன் தலையீடால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ' ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். மற்ற விபரங்களை கூற முடியாது. விசாரணை நடத்தி தான் முடிவு செய்யப்படும். இதுவரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE