சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி, ராமநாதபுரம், விருதுநகரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

Added : டிச 04, 2020
Share
Advertisement
மதுரை:தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,134 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 19,799 ஆகும். இதுவரை 440 பேர் இறந்துள்ளனர். தற்போது 225 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ்

மதுரை:தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,134 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 19,799 ஆகும். இதுவரை 440 பேர் இறந்துள்ளனர். தற்போது 225 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 9986 ஆக உயர்ந்தது. நேற்று 15 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 10,378 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தற்போது 198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,384 பேர் குணமடைந்து உள்ளனர். புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,619 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 312.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மூவர் மீண்டனர். ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டார். இதுவரை 6220 பேர் பாதிக்கப்பட்டதில் 6052 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். 131 பேர் பலியாகினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 14 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6345 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6139 பேர் குணமடைந்தனர். தற்போது 80 பேர் சிகிச்சையில் உள்ளனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதுவரை கொரோனா கண்டறியப்பட்ட 15,942 பேரில் 15,594 பேர் குணமடைந்துள்ளனர். 121 பேர் சிகிச்சையில் உள்ளனர். 227 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X