பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆயிரம் மினி கிளீனிக் மருந்தாளுனர் நியமிக்கலாமே!

Added : டிச 04, 2020
Share
Advertisement
திருப்பூர்:தமிழக அரசு அமைக்க உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்களில், மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மருந்தாளுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், வரும் 15ம் தேதிக்குள், ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் அடங்கிய 2 ஆயிரம் மினி கிளினிக்கள் துவங்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி

திருப்பூர்:தமிழக அரசு அமைக்க உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்களில், மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மருந்தாளுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், வரும் 15ம் தேதிக்குள், ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் அடங்கிய 2 ஆயிரம் மினி கிளினிக்கள் துவங்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மருந்தாளுனர்கள் கூறியதாவது:தமிழக அரசு, 2 ஆயிரம் மினி கிளினிக்களை அமைக்கும் முடிவு வரவேற்புக்குரியது. மக்களை நோக்கி மருத்துவம் என்பது வரவேற்புக்குரியது.இத்திட்டத்தில், மருத்துவர், செவிலியர் பணியிடம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்களுக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் பணிக்கு, மருந்தியல் படித்த மருந்தாளுநர் அவசியமானது.மருந்தியல் சட்டப்படி, மருந்தாளுனர் மட்டுமே மருந்து வழங்குவதைக் கையாள வேண்டும். எனவே மினி கிளினிக்களில் மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X