பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி சீசன் துவங்கியது: ஆரம்பமே அமர்க்களம்

Added : டிச 04, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில், பருத்தி வரத்து அதிகரித்ததுடன், விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.அவிநாசி, கருவலுார், அன்னுார், கோபி உட்பட பகுதிகளில் விளைவிக்கப்படும் பருத்தியை, அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில், விவசாயிகள் விற்கின்றனர்.பொதுவாக, தீபாவளி முடிந்து, டிச., முதல் வாரம், பருத்தி சீசன் துவங்கும்.

அவிநாசி:அவிநாசியில், பருத்தி வரத்து அதிகரித்ததுடன், விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.அவிநாசி, கருவலுார், அன்னுார், கோபி உட்பட பகுதிகளில் விளைவிக்கப்படும் பருத்தியை, அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில், விவசாயிகள் விற்கின்றனர்.பொதுவாக, தீபாவளி முடிந்து, டிச., முதல் வாரம், பருத்தி சீசன் துவங்கும். அவ்வகையில், இந்த வாரம் பருத்தி அறுவடை துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், பல இடங்களில் இருந்து, 412 விவசாயிகள், 2,216 மூட்டை பருத்தி ஏலத்துக்கு எடுத்து வந்தனர்.இதில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 5,000 முதல், 6,200 ரூபாய், டி.சி.எச்., ரகம், 6,000 முதல், 6,950 ரூபாய், கொட்டு ரகம், 1,500 முதல், 3,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. மொத்தம், 43.39 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.விற்பனை சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த இரு வாரமாகவே, பருத்தி விலை அதிகரித்து வருகிறது. முந்தைய வாரத்தைவிட இந்த வாரம், குவின்டாலுக்கு, 600 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது. வரத்தும் உயர்ந்து, விலையும் அதிகரித்திருப்பது, விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X