வெள்ளகோவில்:வெள்ளகோவில் கடைவீதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும்பணி நடந்து வருகிறது.அப்பகுதியில், கழிவுநீர் வெளியேற பாலம் கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், அணுகு சாலை அமைக்க கற்கள் பரப்பப்பட்டுள்ளது.அதில், கனகர வாகனங்கள் தொடர்ந்து செல்வதால், புழுதி பறக்கிறது. இதனால், டூவீலரில் செல்வோர், கடை வைத்திருப்போர் என பலரும் கடும் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு, கடந்த, 20 நாட்களாக புழுதி மண்டலம் உருவாகி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, சாலை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொண்டு முடிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE