திருப்பூர்:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாதென, புதுப்பாளையம் மற்றும் முருகம்பாளையம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகரப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், 'பார்' வசதியுடன் கூடிய மதுக்கடை திறக்க, அ.தி.மு.க., நிர்வாகிகள் முயற்சிப்பதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், புதிய மதுக்கடைக்கு அனுமதிக்க கூடாதென, பொதுமக்களும், கலெக்டரிடம் முறையிட்டு வருகின்றனர்.l அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில், 'புதுப்பாளையத்தில் ஏற்கனவே மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதிதாக ஒரு மதுக்கடை திறக்க முயற்சி நடந்து வருவதை தடுக்க வேண்டும்.'மக்களின் நிலையை உணர்ந்து, மதுக்கடைக்கு அனுமதிக்க கூடாது; அதையும் மீறி மதுக்கடை திறந்தால், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்' என்று தெரிவித்துள்ளனர்.l முருகம்பாளையம் மக்கள் கொடுத்த மனுவில், 'ஊரின் மத்தியில் மதுக்கடை திறக்க முயற்சி நடக்கிறது. கோவில், பள்ளி, வீடுகள் அமைந்துள்ளதால், புதிய மதுக்கடைக்கு அனுமதி வழங்க கூடாது. மாணவியர் அதிகம் பயிலும் பள்ளிகள் இருப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பு உருவாகும்.எனவே, புதிய கடை திறக்க அனுமதிக்க கூடாதென, ஒன்பதாவது முறையாக நினைவூட்டல் மனு கொடுத்துள்ளோம்,' என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE