பெ.நா.பாளையம்;தமிழகத்தில், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி இணையதளம் வாயிலாக அளிக்கப்படுகிறது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 10 ஆயிரத்து, 906 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்கு, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.இம்மாதம், 13ம் தேதி இப்பணிக்கான எழுத்துத் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், GOOGLE FORM இணையதளம் வாயிலாக மாதிரி எழுத்துத் தேர்வு, இம்மாதம், 5, 8, 11ம் தேதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பணிக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள், இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம். மாதிரி தேர்வில் கலந்து கொள்ள, 98423 18081 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், இத்தேர்வுக்கான பாடக்குறிப்புகள், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிட்டு, தேவைப்படும் தகவல்களை திரட்டி, தேர்வுக்கு தயார் செய்து கொள்ளலாம். போட்டித்தேர்வு எழுதி, அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குனர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE