அவிநாசி;அரசு விழாக்களில், தொற்று பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அரசு நலத்திட்ட விழாவில், நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். சமூக இடை வெளியின்றி பங்கேற்பதால்,கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது: ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், பயனாளிகளுக்கு, உடல் வெப்ப பரிசோதனை நடத்திய பிறகே, அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்களாக வருவோர் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டியது, அவர்களின் கடமை. பலரும், அந்த கடமையை உணர்வதில்லை. இதனால், கண்காணித்து வருகிறோம்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE