பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வளர்ச்சி திட்டம்: அதிகாரிகளுக்கு பயிற்சி

Added : டிச 04, 2020
Share
Advertisement
சூலுார்:கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டது.2020-21ம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் சேர்ந்து, பிரசார இயக்கத்தை, தேசிய அளவில் மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த அக்., 2ல் துவங்கிய பிரசாரம், ஜன., 31ம் தேதி வரை நடக்கிறது. கிராம வளர்ச்சி திட்டம்,

சூலுார்:கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டது.2020-21ம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் சேர்ந்து, பிரசார இயக்கத்தை, தேசிய அளவில் மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த அக்., 2ல் துவங்கிய பிரசாரம், ஜன., 31ம் தேதி வரை நடக்கிறது. கிராம வளர்ச்சி திட்டம், அந்தந்த கிராம ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தியும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, கிராம வளர்ச்சி திட்டம், வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது. இதர துறை திட்டங்களை ஒருங்கிணைத்து, வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வட்டார அளவில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், வருவாய், வேளாண் மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கேற்ற இணையவழி பயிற்சி முகாம், நேற்று, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. பவானிசாகரில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.* அன்னுார் வட்டாரத்தில், கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. இன்றும், நாளையும், அல்லப்பாளையம், ஆம்போதி, அ.மேட்டுப்பாளையம், வடவள்ளி, கஞ்சப்பள்ளி, கணுவக்கரை ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கு, கணேசபுரம், கடத்துார் பிரிவில், உள்ள கிருத்திகா மண்டபத்தில் நடக்கிறது. மற்ற, 15 ஊராட்சிகளுக்கு, அதே மண்டபத்தில் வரும் 6,7ம் தேதிகளில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X