திருப்பூர்:திருப்பூரில், குடும்ப பிரச்னை காரணமாக, கர்ப்பிணி தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், செரங்காடு, எம்.பி., நகரை சேர்ந்தவர் அறிவழகன், 26; பனியன் தொழிலாளி. இவரும், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த ரேகா, 24 என்பவரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரேகா கர்ப்பமாக உள்ளார்.கடந்த, 15 நாட்களுக்கு முன், தீபாவளி பண்டிகைக்காக, கணவருடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சரிவர உபசரிக்காததால், கோபமடைந்த ரேகா, மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் அறிவழகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பினார்.அப்போது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்த போது, ரேகா துாக்கில் தொங்கிய நிலையில், இறந்து கிடந்தார். ரூரல் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE