திருப்பூர்;மாநிலம் முழுவதும் நுகர்வோர் ஆணையத்தில், நீதிபதிகள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது, நுகர்வோர் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தற்போது மாவட்ட அளவிலான நுகர்வோர் கோர்ட், நுகர்வோர் ஆணையம் என அந்தஸ்து உயர்த்தி, நிவாரண தொகை ஒரு கோடி ரூபாய் வரை என்ற அளவில் உயர்த்தி உத்தரவிடப்பட்டது. இதனை, நுகர்வோர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.ஆனால், பல்வேறு மாவட்டங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு நீதிபதி மட்டுமே உள்ளார். இதேநிலை தான் மாநிலம் முழுவதும் உள்ளது.இவற்றில் உறுப்பினர்கள் பதவியிடங்களும் சில மாவட்டங்களில் காலியாக உள்ளது. இதனால், வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவு எட்டப்படாமல் உள்ளன. முடிவுற்ற வழக்குகளில் கூட தீர்ப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. உறுப்பினர் இன்றி தீர்ப்பு வழங்க முடியாது.எனவே, மாநிலம் முழுவதும் அனைத்து நுகர்வோர் ஆணையங்களில் உரிய நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். அப்போது தான் இதன் செயல்பாடு முழுமையாக நுகர்வோருக்கு சென்றடையும். பெரும்பாலான உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய நியமனம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை அமைப்புகள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE