அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியம், மங்கரசுவலைய பாளையம், பேரநாயக்கன்புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மத்திய அரசின் மூலம், மூத்தோர் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 'கற்போம், எழுதுவோம் இயக்கம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கிராமங்களில், கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு கற்பிக்க, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தியுள்ளது.கடந்த, 30ல், துவங்கிய மூத்தோர் கல்வி வரும், அடுத்தாண்டு, பிப்., 28ம் தேதி வரை மூன்று மாதம் காலம் நடக்கிறது. பயிற்சியை ஊராட்சி தலைவர் வரதராஜன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் திலகவதி முன்னிலையில், முன்னாள் மாணவி மேனகா, முதியவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE