பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து கண்காணிப்பு

Added : டிச 04, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, முறையாகப் பயன்படுத்த, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும்போது, எந்த அரசியல் கட்சி முகவர்களுக்கும், இதுதொடர்பான

திருப்பூர்:ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, முறையாகப் பயன்படுத்த, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும்போது, எந்த அரசியல் கட்சி முகவர்களுக்கும், இதுதொடர்பான சந்தேகங்கள் எழும்போது, அதிகாரிகள் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.குறிப்பாக, பதிவான ஓட்டுக்களுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுக்களுக்கும் இடையே, ஓட்டு வித்தியாசம் என்பது இருக்கக்கூடாது. இதில், கவனத்துடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இயந்திரம் பழுதாகும்போது, எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருந்தன என்பதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, முகவர்களுக்கும் வெளிப்படையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்கள் எழாது.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முத்திரை வைத்து, சீல் வைக்கும் பணி முடிந்த பின், கட்சி முகவர்கள், இறுதியாக கையொப்பமிட வேண்டும். இதில், அதிகாரிகள் முறையாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X