திருப்பூர்:பகுதி நேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் பணிபுரியும், பகுதி நேர ஆசிரியர்கள் கூறியதாவது:ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் 2011-12ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டோம்.உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய கல்வி இணை செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு ஊதிய உயர்வு 2,700 ரூபாய் வழங்கப்பட்டது. பின், ஊதியம் உயர்த்தப்படவில்லை. மே மாதமும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. போனஸ், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, வருங்கால வைப்பு நதி, இ.எஸ்.ஐ., மருத்துவக்காப்பீடு எதுவும் இல்லை.கடந்த காலங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், கணினி ஆசிரியர்கள் மற்றும் துப்புரவாளர்கள், இரவுக்காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், பகுதி நேர ஆசிரியர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காக்க முழு நேர வேலையுடன் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE